புத்தாண்டு மற்றும் பொங்கல் சீட்டு சேகரிப்பு சிறப்பு பரிசுகளுக்கான
குலுக்கல் மற்றும் பரிசளிப்பு விழா - 29-05-2011
பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் ஓர் அங்கமான தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெரம்பலூரை தலைமையிடமாக திருச்சி, விருத்தாசலம், கடலூர், நெய்வேலி, திட்டக்குடி, சிதம்பரம், கரூர், நாமக்கல், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், பண்ருட்டி ஆகிய ஊர்களில் கிளைகளை துவக்கி செயல்பட்டு வருகிறது. இதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுக்கான குலுக்கல் மற்றும் பரிசளிப்பு விழா நேற்று பெரம்பலூரில் கல்லூரி வளாகத்திடலில் நடந்தது.
விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ் வரவேற்றார். துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், சிறப்பு விருந்தினராக திருச்சி கே.ஆர்.டி., குழுமத்தின் தலைவர் ரெங்கராஜன் பங்கேற்று பரிசு பெற்ற வாடிக்கையாளருக்கு பரிசு வழங்கினார். வாடிக்கையாளருக்கான குலுக்கலில் முதல் பரிசு பெற்ற விருத்தாசலத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்திக்கு மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக பெரம்பலூர் சுமதி, கடலூர் முத்துகுமாரசாமி, பண்ருட்டி சிலம்பரசன் ஆகியோருக்கு டூவீலர் வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசாக ஆத்தூர் சத்தியநாராயணன், திருச்சியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மற்றும் சங்கர், நாமக்கல் தனலட்சுமி, பண்ருட்டி செந்தில்குமார் ஆகிய 5 பேருக்கு வழங்கப்பட்டது. மேலும் 4 வது பரிசாக டி.வி.எஸ்., ஸ்கூட்டி 7 நபர்களுக்கும், 5வது பரிசாக எல்.சி.டி., டிவி 10 நபர்களுக்கும், 6வது பரிசாக ஹோம் தியேட்டர் 12 நபர்களுக்கும், 7வது பரிசாக 15 நபர்களுக்கு பிரிட்ஜூம் வழங்கப்பட்டது. ஹேண்டி கேமரா, ரேடியோ அலார கடிகாரம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. பெரம்பலூர் யூனியன்குழு முன்னாள் தலைவர்கள் அட்சயகோபால், ராஜாராம்,சிட்பண்ட்ஸ் துணை பொது மேலாளர் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். துணை பொது மேலாளர் அருண் நன்றி கூறினார்.
|