12th MEMORIAL DAY - 20-07-2011
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் குழும தலைவர் சீனிவாசனின் மனைவி தனலட்சுமி அம்மையாரின் 12வது நினைவு நாளை முன்னிட்டு 1,500 பேருக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கப்பட்டது. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் குழும தலைவர் சீனிவாசனின் மனைவி தனலட்சுமி அம்மையாரின் 12வது நினைவு தினம் ஜூலை 20ம் தேதி நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பெரம்பலூர் -துறையூர் சாலையில் கல்லூரி வளாகம் அருகே உள்ள தனலட்சுமி அம்மையாரின் நினைவிடம் பூ மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிப்பட்டிருந்தது. அவரது நினைவு நாளையொட்டி குத்துவிளக்கேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 1,500 பேருக்கு இலவச வேஷ்டி சேலைகளை தனலட்சுமி சீனிவாசன் குழும தலைவர் சீனிவாசன் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் குழும செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர். இதில், சுகர்ஸ் செயல் அலுவலர் சின்னப்பன், மருத்துவக்கல்லூரி டீன் ரெங்கநாதன், கல்லூரி முதல்வர்கள் சார்லஸ், கார்த்திகேயன், பாகீரதி, சுகுமார், வேல்முருகன், பாஸ்கரன், பாலசுப்ரமணியம், டீன் சேகர், துணை முதல்வர் நந்தகுமார், பள்ளி தலைமையாசிரியர் சாந்தி மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் குழும குடும்பத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர். |

