|
"முன்னேறு முன்னேற்று" நூல் வெளியீட்டு விழா
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் தலைவர் சீனிவாசன் வாழ்க்கை வரலாறு பற்றிய "முன்னேறு முன்னேற்று" என்ற நூல் வெளியீட்டு விழா வரும் 21ம் தேதி தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன வளாகத்தில் நடக்கிறது. எழுத்தாளர் மோகன்தாஸ் எழுதிய தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் தலைவர் சீனிவாசன் வாழ்க்கை வரலாறு பற்றிய, "முன்னேறு முன்னேற்று" என்ற நூல் வெளியீட்டு விழா வரும் 21ம் தேதி தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன வளாகத்தில் நடக்கிறது. விழாவுக்கு புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம் தலைமை வகிக்கிறார். தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில் புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம் பங்கேற்று, "முன்னேறு முன்னேற்று'' என்ற நூலின் முதல் பிரதியை வெளியிடுகிறார். இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுந்தரராஜன் வாழ்த்துரை வழங்குகிறார். விழாவில் கல்லூரி முதல்வர்கள் தாயுமாணவன், சார்லஸ், அனுஷாபாஸ்கர், முத்தரசு, சுகுமார், வேல்முருகன், பாஸ்கரன், பாலசுப்ரமணியன், புனிதலட்சுமி, தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர் செல்வமணி, தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி உட்பட பலர் பங்கேற்க உள்ளனர். |
